Thursday, September 6, 2018

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை!

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை!

ஜெயலலிதா உயிரோடு இருந்த பொழுதில் ஒரு திருமண நிகழ்வின் போது 
நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார்.



புலியாக மாறினாலும் பயம்

"சிலர் தேவையற்ற வீண் அச்சத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தைப் போக்கி, துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

ஒரு ஞானியின் நிஷ்டை கலைந்த போது, ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியைப் பார்த்த ஞானி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். “பூனையைக் கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றி விட்டால் உங்களுக்குப் புண்ணியம் உண்டு” என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.

இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் அப்பூனை வந்து ஞானி முன் நின்றது. பூனையைக் கண்ட ஞானி, “இப்போது என்ன பிரச்சனை?” என்று வினவினார்.

Tuesday, September 4, 2018

வீர இளைஞருக்கு -விவேகானந்தரின் வீர முரசு

வீர இளைஞருக்கு -விவேகானந்தரின் வீர முரசு 

வீரர்களுக்கே முக்தி எளிதாகக் கிடைக்கிறது ,பேடிகளுக்கு அல்ல. வீரர்களே, கச்சையை வரிந்துகட்டுங்கள். மகாமோக மாகிய எதிரிகள் உங்கள் முன் உள்ளார்கள்.பெருஞ் செயல்களுக்குத் தடைகள் பல என்பது உண்மைதான், என்றாலும் இறுதி வரை விடாமல் முயலுங்கள். மோகமாகிய முதலையிடம் சிக்கிய மனிதர்களைப் பாருங்கள். அந்தோ,இதயத்தைப் பிளக்கவல்ல அவர்களின் சோகக்  கூக்குரலைக் கேளுங்கள். வீரர்களே!

கட்டுண்டவர்களின் தலைகளை வெட்டி எறியவும், எளியவர்களின் துயரச் சுமையைக் குறைக்கவும், பாமரர்களின் இருண்ட உள்ளங்களை ஒளிபெறச் செய்யவும் முன்னேறிச் செல்லுங்கள். ‘அஞ்சாதே அஞ்சாதே ‘ என்று முழங்குகிறது வேதாந்த முரசு. பூமியில் வசிக்கின்ற மனிதர்கள் அனைவருடைய இதய முடிச்சுக்களையும் அது அவிழ்த்து எறியட்டும்!

Friday, August 31, 2018

வாழ்க்கைக்கு உதவும் நான்கு வரி செய்திகள் Enuyir post 3

வாழ்க்கைக்கு உதவும் நான்கு வரி செய்திகள்

நம் உடலை சுத்தம் செய்ய பாஸ்டிங்க் இருக்கிறோம் அல்லது உடலுக்கு பயன்படும் மூலிகை சாறுகளை குடிக்கிறோம்.. ஆனால் நம் வாழ்க்கையை சுத்தம் செய்ய ஏதாவது செய்கிறோமா என்று பார்த்தால் அது ஒரு கேள்வி குறியாவே இருக்கிறது...

Thursday, August 30, 2018

கடையில் விற்கும் இட்லி,தோசை மாவு ஸ்லோ பாய்ஸனா?

கடையில் விற்கும் இட்லி,தோசை மாவு ஸ்லோ பாய்ஸனா?


ஆமாம்  இட்லி,தோசை மாவு ஸ்லோ பாய்ஸனாகி கொண்டிருக்கிறது என்பது  உண்மைதான்.

 ஒரு வயது குழந்தை முதல் தள்ளாடும் வயது வந்தவர்கள் வரை உண்­பது "இட்லி, அல்லது தோசை" எனப்­ப­டும்  தமி­ழ­னின் உணவு. இது போக நோயாளிகளும், அறுவை சிகிச்சை செய்­த­வர்­க­ளும் மற்­றும் திட உணவு சாப்­பிட ஆரம்­பிக்­கும் எந்த ஒரு நோயாளிகளுக்கும் பரிந்­து­ரைக்­கும் முதல் உணவு வேகவைத்த இட்லிதான்.

இட்­லியை நீங்­கள் வீட்­டில் மாவ­ரைத்து சாப்­பிட்­டால் பிரச்னை கொஞ்­ச­மும் இல்லை .இதை கடை­யில் வாங்கி சாப்­பிட்­டால் பல பேருக்கு ஒத்து வராது என்­பது மறுக்க முடி­யாத உண்மை. பிறகு என்­ன­தான் பிரச்னை என்­கி­றீர்­களா, அது பற்­றிய  கட்­டுரைதான் இந்த பதிவு.

என் உயிர் தமிழா!

என் உயிர் தமிழா!

தமிழனாக பிறந்து, தமிழனாக வளர்ந்து, தமிழனாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன்.இன்றைய காலங்களில் சமுக இணையத்தளம் என்பது நம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமாகி போனது. சமுக வலைத்தளங்களில் எவ்வளவோ செய்திகள், தகவல்களை நாம் படித்து அறிகிறோம்.அப்படி நாம் படித்தவைகளில் நம் மனதை பல கவர்ந்து செல்கின்றது.அப்படி என்னை கவர்ந்து விஷயங்கள்,  அதாவது நான் படித்து ரசித்த விஷயங்கள் அதன் மூலம் என் மனதில் எழும் எண்ண அலைகளை இங்கே நான் பதிவுகளாக பதிந்து செல்கிறேன்.


அந்த பதிவுகள் உங்களை கவர்ந்தால் உங்கள் கருத்துகளை இங்கே பதிந்து செல்லுங்கள்.இங்கு மதம் சாதி  சினிமா தவிர்த்த அனைத்து விஷயங்களும் பதிவிடப்படும்


என் முயற்சிக்கு ஆதரவு தருவீர்களா?

இப்படிக்கு
குத்தூசி

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள்

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள் பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவர...