Thursday, August 30, 2018

கடையில் விற்கும் இட்லி,தோசை மாவு ஸ்லோ பாய்ஸனா?

கடையில் விற்கும் இட்லி,தோசை மாவு ஸ்லோ பாய்ஸனா?


ஆமாம்  இட்லி,தோசை மாவு ஸ்லோ பாய்ஸனாகி கொண்டிருக்கிறது என்பது  உண்மைதான்.

 ஒரு வயது குழந்தை முதல் தள்ளாடும் வயது வந்தவர்கள் வரை உண்­பது "இட்லி, அல்லது தோசை" எனப்­ப­டும்  தமி­ழ­னின் உணவு. இது போக நோயாளிகளும், அறுவை சிகிச்சை செய்­த­வர்­க­ளும் மற்­றும் திட உணவு சாப்­பிட ஆரம்­பிக்­கும் எந்த ஒரு நோயாளிகளுக்கும் பரிந்­து­ரைக்­கும் முதல் உணவு வேகவைத்த இட்லிதான்.

இட்­லியை நீங்­கள் வீட்­டில் மாவ­ரைத்து சாப்­பிட்­டால் பிரச்னை கொஞ்­ச­மும் இல்லை .இதை கடை­யில் வாங்கி சாப்­பிட்­டால் பல பேருக்கு ஒத்து வராது என்­பது மறுக்க முடி­யாத உண்மை. பிறகு என்­ன­தான் பிரச்னை என்­கி­றீர்­களா, அது பற்­றிய  கட்­டுரைதான் இந்த பதிவு.



 ஒரு காலத்­தில் நாம் ஆட்­டு­ர­லில் மாவு அரைத்­தோம். அதன் பின் அது மிக்ஸி மற்­றும் எலக்ட்­ரா­னிக் கிரைண்­டராக மாறியது .  வாழ்க்கை மாற்­றங்­க­ளின் கார­ணத்­தால் அதுவும் தவிர்க்க முடி­யாத ஒரு விஷ­ய­மாகி­ போனது. சமீ­ப­மாக ஒரு முக்­கிய திருப்பு முனை­யாக இட்லி  தோசை மாவு ரெடி­யாக இப்­பொ­ழுது பட்டி தொட்டி, அண்­ணாச்சி கடை முதல் பெரிய சூப்­பர் மார்க்­கெட்­டி­லும் கிடைக்­கி­றது.  இந்த கால மக்­க­ளுக்கு இட்லி மாவு அரைப்­ப­து எப்படி என்பதே மறந்து போயிடுச்சு என்று சொல்லாம்

முன்­பா­வது திடீர் டிபன் ரவா உப்­பு­மா­தான். இப்­பொ­ழுது நம்ம வீட்டு சின்ன சிறுசுகளிடம்  ஒடி போய் ஒரு பாக்­கெட் இட்லி தோசை மாவு தெரு­முனை கடை­யில வாங்கி வா" என்று சொல்லி, அந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்­சத்தை பிரிஜ்­ஜில் வைத்து அது முடி­யும் வரை உப­யோ­கிக்­கி­றார்­கள். இதை பேச்­சு­லர்ஸ் மட்டுமல்ல குடும்ப பெண்களும் அன்றாடம் பயன்படுத்துகிறார்கள்

இந்த மாவு ஒரு உயிர்­கொல்லி, ஸ்லோ பாய்­ஸன் என்­பது ஏனோ நிறைய பேருக்கு தெரி­வ­தில்லை. இதன் பயங்­க­ரத்தை இங்கு பார்ப்­போம் வாருங்­கள்...

Food Poison: Watch How "Dosa Maavu" in packets are made?


1. நீங்­கள் வாங்­கும் எந்த ஒரு வெட் ப்ளோர் -Wet Flour (ஈர பத தோசை மாவிற்கு) ஐ எஸ் ஐ -ISI சான்­றி­தழ் கிடை­யாது. அத­னால் இது எந்த ஒரு ஆராய்ச்சி கூடத்­தி­லும் சோதனை செய்­ய­ப்ப­ட­வில்லை.

2. இந்த மாவு சில மட்­ட­மான அரி­சி­யும், உளுந்­தும், முக்­கி­ய­மாக மாவுக்கு முன் காலத்­தில் புண்­ணுக்கு பயன்­ப­டும் போரிங் பவு­டர் மற்­றும் ஆரோட் மாவு போடு­வ­தால் மாவு பூளிப்பு வாசைனை கண்டிப்பாக வராது. அது போக மாவும் பொங்கி நிறைய வரும் என்­ப­தால் இதை செய்­கின்­ற­னர். இதே மாதிரி வீட்­டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூணா­வது நாள் முகர்ந்து பாருங்­கள். புளிப்பு வாசை­னை­யும் வரும். தோசை­யும் புளிக்­கும். ஏனென்­றால் மாவு பக்­கு­வ­மா­வ­தும், தயிர் உறை­வ­தும் ஒரு நல்ல பேக்­டீ­ரி­யா­வின் செய­லா­கும். இதை தவிர்க்­கத்­தான் கடை­யில் வாங்­கும் மாவுக்கு 6 நாள் கியா­ரன்டி அளித்­தும் ஒரு வாச­னை­யும் வரா­மல் இருக்க கார­ணம்  புண்­ணிற்கு போடும் போரிங் பவு­ட­ரும், ஆரோட் மாவும்­தான்.

3. முக்­கி­ய­மாக இந்த கிரைண்­டர்­கள் கமர்­ஷி­யல் ரகம் இல்லை. அதா­வது ஒரு நாளைக்கு 3 –- 6 மணி நேரம் அரைக்க முடி­யும். ஆனால் இவர்­கள் 12- – 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்­டு­வ­தால் அந்த கல் கொஞ்­சம் கொஞ்­ச­மாக தேய்­மா­னம் ஏற்­பட்டு பல சம­யம் இந்த சிறு கருங்­கள் துகள்­க­ளால் தான் சமீ­ப­மாக நிறைய பேருக்கு சிறு நீர­கத்­தில் கல் உண்­டா­கி­றது. ஒரு நல்ல கல்­லின் ஆயுள் 12 மணி நேரம் அரைத்­தால் வெறும் 6 மாதம் தான். கொத்தி போட்­டா­லும் அடுத்த மூன்று மாதம் தான்.

4.  சமை­யல் செய்­யும் ஆட்­கள் கை அடிக்­கடி கழுவ வேண்­டும். நகங்­கள் வளர்க்­கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்­த­தை­யும் இவர்­கள் பேணு­வ­தில்லை. ஒவ்­வொரு நகத்­தின் இடுக்­கி­லும் உள்ள கிரு­மி­கள் இந்த மாவில்­கெட்ட பேக்­டி­ரி­யாக்­கள் மற்­றும் கிரு­மி­கள் ஈஸி­யாக சேர்ந்து உங்­க­ளுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து மற்­றும் வாந்தி பேதி அடிக்­கடி உடம்பு முடி­யா­மல் போவ­தற்க்கு இது தான் கார­ணம்.

5. கிரைண்­டரை எனக்கு தெரிந்து பெண்கள் பயன்­ப­டுத்த தயக்­கம், இரண்டு விஷ­யங்­கள். 1. கிரைண்­டரை சுத்­தம் செய்­யும் கஷ்­டம் 2. கல்லை துாக்கி போட வேண்­டும். ஒவ்­வொரு முறை­யும், பெரிய குடும்­ப­மென்­றால் இது சாத்­தி­யம். சிறு குடும்­பம் அத­னா­லயே கடை­யில் மாவு வாங்­கு­கி­றது. ஆனால் இவர்­கள் கிரைண்­டரை ஒவ்­வொரு மாவு முடிந்­தும் கழு­வு­வ­தில்லை அத­னால் அந்த கிரைண்­ட­ரின் கிருமி அதி­க­ரித்து கொண்டே செல்­கி­றது. இவர்­கள் வணிக ரீதியாக பயன்­ப­டுத்த ஒவ்­வொரு முறை­யும் சூடு நீர்(Hot Water) உற்றி தான் சுத்­தம் செய்ய வேண்­டும். ஆனால், இவர்­கள் ஒரு வாரத்­திற்கு ஒரு முறை கழு­வி­னாலே அதி­கம். மாவு பொருட்­க­ளி­னால் எலி­கள் மற்­றும் பூச்­சி­கள் அந்த மிச்ச மாவை ருசிக்க கண்­டிப்­பாக சாத்­தி­யம் உண்டு.

6. என்­ன­தான் நல்ல அரிசி, உளுந்து போட்­டா­லும் நல்ல தண்­ணீர்­தான் ஊற்றி மாவு அரைக்க வேண்­டும். இவர்­கள் எந்த தண்­ணீரை உப­யோ­கப்­டுத்­து­கின்­ற­னர் என்­பது கட­வு­ளுக்கு கூட தெரி­யாது. எனக்கு தெரிந்த தக­வல் படி இவர்­கள் போரிங் தண்­ணீர் மற்­றும் உப்பு தண்­ணிரை ஊற்­று­கின்­ற­னர். கார­ணம், உப்பு போட வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

7. அந்த கால பார்­முலா படி நம் முன்­னோர்­கள் இட்­லிக்கு மாவு அரைக்­கும் போது ஒரு கை வெந்­த­யத்தை போட்டு அரைப்­பார்­கள். வெந்­த­யம் ஒரு இயற்கை ஆன்டி பயா­டிக்.  உடம்பு உஷ்­ணம், வாய் நாற்­றம், அல்­சர்க்கு இது ஒரு நல்ல பொருள். ஆனால் இவர்­கள் யாரும் வெந்­த­யத்தை உப­யோ­கிப்­ப­தில்லை.

8. கிரைண்­ட­ரில் மாவு தள்­ளி­வி­டும் அந்த பைபர் பிளாஸ்­டிக்கை ஆறு மாதத்­திற்க்கு அல்­லது வரு­டத்­திற்கு ஒரு முறை மாற்ற வேண்­டும். ஆனால், இவர்­கள் அதை மாற்­றவே மாட்­டார்­கள். அத­னால் அந்த பிளாஸ்­டிக் கொஞ்­சம் கொஞ்­ச­மாக தேய்ந்து அது­வும் இந்த மாவில்­தான் விழு­கி­றது.

9. கிரைண்­டர் ஒட அந்த மத்­திய குழ­வியை இணைக்­கும் ஒரு செயின். அந்த செயினை இவர்­கள் கழட்டி ஒரு கார்­பன்­டம் பெல்ட்டை மாட்டி இருப்­பார்­கள். ஒன்று சத்­தம் வரா­மல் இரு­ப­தற்­கும் மற்­றும் மாவை கையால் தள்ளி விடா­மல் அரைக்­கும் டெக்­னிக்­கிற்­காக. அந்த பெல்ட் தண்­ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்­க­ளும் மாவில்­தான் விழு­கி­றது.

10. இந்த மாவை இவர்­கள் அரைத்து கடைக்கு பிளாஸ்­டிக் பேக் மூலம் சப்ளை செய்­கின்­ற­னர். நமது தமிழ் நாட்டு கிளை­மேட்­படி இதை பிரிட்ஜில் தான் வைக்க வேண்­டும். அப்­பொ­ழு­து­தான் இந்த மாவில் பாக்­டீ­ரி­யா­வின் உற்­பத்­தியை கட்­டு­ப­டுத்த முடி­யும். ஆனால் நம்­மூர்  கடை­க­ளில் கரண்ட் கட் பிரச்­னை­யில் இந்த மாவு கண்­டிப்­பாக பாய்­ஸ­னா­கி­றது.

இந்த மாவில் நிறைய இடங்­க­ளில் இப்­பொ­ழுது பால், தயிறு, முட்டை, காய்­கறி, மாட்­டி­றைச்சி­க­ளில் காணப்­ப­டும் ஈகோலி (E-COLI) எனும் பாக்­டீ­ரியா பரவி சில­ருக்கு உடனே பிரச்­னை­யும், சில­ருக்கு இந்த மாவு­கள் ஸ்லோ பாய்­ஸ­னா­க­வும் உரு­வா­கி­றது. இந்த ஈகோலி - 24 மைனஸ் 24 டிகி­ரிக்கு கீழே இருந்­தால்­தான் கொஞ்­ச­மா­வது கட்­டுப்­ப­டும்.

அத­னால் தயவு செய்து  விற்­பனை செய்­யும் மாவில் 6 நாள் கியா­ரண்­டி­யில் ஈர­மான இட்லி, தோசை மாவை கண்­டிப்­பாக வாங்­கு­வதை தவி­ருங்­கள். உலர்ந்த மாவு பர­வா­யில்லை. இதே மாதிரி சிலர் மாவ­ரைத்து நான்கு அல்­லது ஐந்து பேர் ஷேர் செய்­யும் தாய்­மார்­க­ளும் கண்­டிப்­பாக கவ­னம் தேவை.

இப்­பொ­ழுது இது ஒரு அங்­கி­க­ரிக்­க­பட்ட தொழில் அல்ல. அத­னால் மாந­க­ராட்சி ரெய்டு செய்து மாவு அரைக்­கும் இடங்­க­ளில் எல்­லாம் கைய­கப்­ப­டுத்­து­கி­றது. என்­ன­தான் கைய­கப்­ப­டுத்­தி­னா­லும் எல்­லாம் நம் கையில் தான் இருக்­கி­றது அல்­லவா....!   வெந்த இட்லியிலும் சில வேகாத விஷயங்கள் இது.




உண்மையை போட்டு உடைக்கும்
உங்கள் குத்தூசி

முன்பு தமிழ் நாளிதழில் வந்த செய்தியை வைத்து இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கிறது



தகவல் தொடர்புக்கு : enuyirthamizha@gmail.com

6 comments:

  1. அற்புதமான தகவல்கள் நண்பரே ஆனால் இதைப்படிப்பவர்கள் இதை கடைப்பிடிக்க வேண்டும்.

    இன்று மருத்துவமனையில் கூட்டம் கூடுவதின் அடிப்படையே இதுதான்.

    நிச்சயமாக நான் இனி கடையில் மாவு வாங்குவதை வீட்டில் தடுப்பேன் இது உறுதி நண்பா.

    கில்லர்ஜி
    தேவகோட்டை

    ReplyDelete
    Replies
    1. நம் உடல் நலம் நாம்தான் காக்க வேண்டும... பிரச்சனை ஆன பின் டாக்டரிடம் சென்று பணத்தை கொட்டி அதன் பின் சமுகத்தை குறஒ சொல்லுவதில் பயன் இல்லை.. வருமுன் காக்க வேண்டும்

      Delete
  2. பொதுவாக கடையில் வாங்குவதில்லை. வீட்டிலே அரைப்பது தான். நல்லதொரு எச்சரிகை பதிவு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெங்க்ட் சார்.. உங்களின் பல பதிவுகளை நான் படித்து இருக்கிறேன்

      Delete
  3. உபயோகமான தகவல். நன்றி. நான் வீட்டில்தான் அரைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திருமதி.பானுமதியம்மா

      Delete

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள்

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள் பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவர...