Saturday, August 22, 2020

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள்

Songs sung by Pattinathar during his mother's funeral at the crematorium
பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள்

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். “அவருடைய ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன்” என்று வாக்களித்திருந்த படி பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்தார்.

அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையடுக்கி, “ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்று” என்று பாடத் தொடங்கி, தம் தாயாரை தீயுண்ணச் செய்து தம் தாய்க்குரிய கடனைக் கழித்தார்.

அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.
  

விநாயகப்பெருமானை பற்றிய பல அறிந்த அறியாத விஷயங்கள்.

known and unknown things about Lord Ganesha.


அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.... இந்த வாழ்த்தோடு பிள்ளையார் பற்றி அறிந்த அறியாத செய்திகள் பலவற்றை இங்கு பகிர்கின்றேன்.


 விநாயகப்பெருமானை பற்றிய பல அறிந்த அறியாத விஷயங்கள்.



விநாயகர் என்பதன் பொருள் {நாதமும் விந்துவும்}
விநாயகர் என்ற சொல்லுக்கு “வி” – இல்லாமை. “நாயகன்” – தலைவன். விநாயகர் – மேலான தலைவர், தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்று பொருள்.


ஓம் அநீஸ்வராய நம: என்னும் மந்திரத்திற்கு – தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதே பொருள். ஸ்ரீ ஆதி சங்கரர் தாம் அருளிய கணேச பஞ்சரத்னத்துள் “அநாயகைக நாயகம்”என்று கணபதியைப் போற்றுகின்றார். அநாயக-ஏக-நாயகம்= அதாவது தனக்கு மேலோரு நாயகரில்லாமல் தானே ஏக நாயகனாக இருப்பவர் என்பது இதன் பொருள். வழிபடுவோரின் விக்கினங்களை {இடையூறுகளை} போக்குபவராதலின் இவருக்கு விக்னேஸ்வரன் என்றும் கணங்களுக்குத் தலைவராயிருப்பதால் கணநாதன், கணபதி என்று அன்புடன் வணங்கப்படுகிறார்.

  

Thursday, August 20, 2020

வணக்கம் நண்பர்களே. நலமா?

 வணக்கம் நண்பர்களே. நலமா? நீண்ட காலம் கழித்து இங்கு வருகிறேன். உடல்நிலை சரியில்லாமல்  ஓய்வில் இருந்த நான், தற்போது நலம் பெற்று இருக்கின்றேன் . வேலைக்கும் செல்ல ஆரம்பித்து இருக்கின்றேன்.அதனால் மீண்டும் என் எழுத்தைத் தொடரலாம் என நினைத்து இருக்கின்றேன்.தங்களின் ஆதரவை மீண்டும் தரவும். நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் உங்கள் தளங்களுக்கும் வந்து படித்து கருத்து சொல்கிறேன்


இப்படிக்கு உங்கள்
அன்பு

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள்

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள் பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவர...