Tuesday, September 11, 2018

மெளனமாய் இருப்பது எல்லாம் முட்டாள்களின் செயல்கள் அல்ல

மெளனமாய் இருப்பது எல்லாம் முட்டாள்களின் செயல்கள் அல்ல   நிறை குடம் எப்போதும் சலனமற்று அமைதியாகத்தான் இருக்கும்

கோழி இடுவது  ஒரு முட்டைதான் என்றாலும் அது   கொக்கரித்து ஊரையே கூட்டிவிடும்.


ஆனால் ஆமைகள் நூற்றுகணக்கில்   முட்டைகள் இட்டாலும்  சத்தமில்லாமல் அமைதியாய் படுத்திருக்கும்

ஆயிரக் கணக்கில் பூக்களை சொரியும்   செடிகள் ஆர்பரிப்பதும் இல்லை அழுவதுமில்லை.   அது போல பல்லாயிரக் கணக்கில் கனிகளை தரும் மரம் ஊரைக் கூட்டி கூவி சொல்வதில்லை. 



வாழை மரம்  நல்ல குலை தள்ளிய பின் அதை வெட்டி எறிகையிலும் தன் தியாகத்தை சொல்வதில்லை. தாகம் தீர இளநீரையயும் ஒய்வு எடுக்க கூரைகளையும் தருகின்ற தென்னை கூட ஒரு நாளும் தற்பெருமை  பேசி கொள்வதில்லை

தன் குட்டிக்கு வைத்திருக்கும்  பாலை  நாம் எடுத்தும் கூட  பசு  ஒரு நாளும் குத்தி காட்டி பேசுவதில்லை

நல்ல சிந்தனைகளையும் எண்ணைங்களையும் சொத்தாக கொண்டவரோ  என்றும்  அமைதி காத்து மெளனமாய் இருந்திடுவார்கள்

ஆனால் அரை குறை அறிவுள்ள மனிதர்களேஅறியாமை காரணத்தால் ஆகாயம் முட்ட துள்ளி  குதித்திடுவர் ஊரை கூட்டி பெரியவர் போல் பித்தலாட்டம் செய்திடுவர்.

இது  சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல நம்மை ஆளும் தலைவர்களுக்கும் இது பொருந்தும்...



மெளனமாக இருந்து கொண்டு இருப்பவன்  உங்கள் "குத்தூசி

7 comments:

  1. /// நல்ல சிந்தனைகளையும் எண்ணைங்களையும் சொத்தாக கொண்டவரோ என்றும் அமைதி காத்து மெளனமாய் இருந்திடுவார்கள் ///

    அவருக்கு நல்லது... நாட்டிற்கு...?

    ReplyDelete
    Replies
    1. இப்படி எல்லோருமே நல்லவர்களாக இருந்து விட்டால் நாட்டிற்கு நல்லதுதானே.

      தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி தனபாலன் சார்

      Delete
  2. நல்ல அறிவாளிகள் பலரும் வெளியுலகு அறியாமல் மறைந்து போனவர்களும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதும் உண்மைதான் கில்லர்ஜி சார்

      தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி

      Delete
  3. நல்ல உவமைகள்.. உதாரணங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் நன்றி ஸ்ரீராம் சார்

      Delete
  4. ரொம்ப சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள்

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள் பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவர...