Wednesday, September 19, 2018

மனமென்னும் பாத்திரத்தை மனதார நிரப்புங்கள்!

மனமென்னும் பாத்திரத்தை மனதார நிரப்புங்கள்!



மனிதர்களைப் படிப்பதுதான் வாழ்க்கைக்கான அடிப்படை தேவை. ஆனால், அதை என்னவோ நாமே பலமுறை கீழே விழுந்து, எழுந்துதான் கற்க வேண்டியிருக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே கற்றுக்கொடுக்கவேண்டிய, ஒரு கலை.

தலையாட்டிக்கொண்டே இருக்காமல் நடுவில் உங்கள் சந்தேகங்களைக் கூச்சப்படாமல் கேளுங்கள். என் கணவர், பல நேரங்களில் அலுவல் சம்பந்தமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, நான் அதுவரை அறிந்திராத புதியவற்றை மேற்கோள்காட்டிப் பேசுவார். அப்போது தயக்கமின்றி, அது என்னவென்று தெரிந்துகொண்டு, மீண்டும் தொடருமாறு கேட்டுக்கொள்வேன்.

Tuesday, September 11, 2018

மெளனமாய் இருப்பது எல்லாம் முட்டாள்களின் செயல்கள் அல்ல

மெளனமாய் இருப்பது எல்லாம் முட்டாள்களின் செயல்கள் அல்ல   நிறை குடம் எப்போதும் சலனமற்று அமைதியாகத்தான் இருக்கும்

கோழி இடுவது  ஒரு முட்டைதான் என்றாலும் அது   கொக்கரித்து ஊரையே கூட்டிவிடும்.


ஆனால் ஆமைகள் நூற்றுகணக்கில்   முட்டைகள் இட்டாலும்  சத்தமில்லாமல் அமைதியாய் படுத்திருக்கும்

ஆயிரக் கணக்கில் பூக்களை சொரியும்   செடிகள் ஆர்பரிப்பதும் இல்லை அழுவதுமில்லை.   அது போல பல்லாயிரக் கணக்கில் கனிகளை தரும் மரம் ஊரைக் கூட்டி கூவி சொல்வதில்லை. 

Monday, September 10, 2018

உனக்குள்ளே இருப்பது எது...? மெளனம் என்பது என்ன?

உனக்குள்ளே இருப்பது எது...? மெளனம் என்பது என்ன?

சத்தமில்லாமல் ஓசை எழுப்பாமல் அமைதியாக இருப்பதை மெளனம் என்று நினைக்கிறோம். உண்மை அதுவல்ல யார் மனதில் எண்ண அலைகள் உற்பத்தி ஆகாமல் சஞ்சலம் சலனம் இல்லாமல் இருக்கிறதோ அங்கே மெளனம் குடிகொண்டிருக்கும் எண்ணங்கள் இல்லாமல் இருப்பதே மெளனம்.

Friday, September 7, 2018

சில நேரங்களில் சிறியவர்களிடம் , பெரியவர்கள் பாடம் கற்று கொள்வதுமுண்டு

சில நேரங்களில் சிறியவர்களிடம்  பெரியவர்கள் பாடம் கற்று கொள்வதுமுண்டு


தக‌ப்பனு‌க்கு த‌த்துவ‌ம் சொ‌ன்ன முருக‌ன் போ‌ன்று இ‌ங்கு ஆ‌சி‌ரியரு‌க்கு ஒரு மாணவ‌ன் பாட‌ம் சொ‌ல்‌கிறா‌ன். இ‌ந்த பாட‌த்‌தி‌ன் மூல‌ம் நா‌ம் உணர வே‌ண்டியது ஒ‌ன்று உ‌ள்ளது. அதாவது, எ‌ந்த பொருளையு‌ம் ‌ம‌தி‌ப்பு‌க் குறைவாக எ‌ண்ண‌க் கூடாது எ‌ன்பதுதா‌ன்.

சூரியனுக்கு நிகர்

Thursday, September 6, 2018

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை!

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை!

ஜெயலலிதா உயிரோடு இருந்த பொழுதில் ஒரு திருமண நிகழ்வின் போது 
நம்பிக்கை மற்றும் தாழ்வு மனப்பான்மையை விலக்குவதற்காக இரண்டு கதைகளைக் கூறினார்.



புலியாக மாறினாலும் பயம்

"சிலர் தேவையற்ற வீண் அச்சத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தைப் போக்கி, துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

ஒரு ஞானியின் நிஷ்டை கலைந்த போது, ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியைப் பார்த்த ஞானி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். “பூனையைக் கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றி விட்டால் உங்களுக்குப் புண்ணியம் உண்டு” என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார்.

இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் அப்பூனை வந்து ஞானி முன் நின்றது. பூனையைக் கண்ட ஞானி, “இப்போது என்ன பிரச்சனை?” என்று வினவினார்.

Tuesday, September 4, 2018

வீர இளைஞருக்கு -விவேகானந்தரின் வீர முரசு

வீர இளைஞருக்கு -விவேகானந்தரின் வீர முரசு 

வீரர்களுக்கே முக்தி எளிதாகக் கிடைக்கிறது ,பேடிகளுக்கு அல்ல. வீரர்களே, கச்சையை வரிந்துகட்டுங்கள். மகாமோக மாகிய எதிரிகள் உங்கள் முன் உள்ளார்கள்.பெருஞ் செயல்களுக்குத் தடைகள் பல என்பது உண்மைதான், என்றாலும் இறுதி வரை விடாமல் முயலுங்கள். மோகமாகிய முதலையிடம் சிக்கிய மனிதர்களைப் பாருங்கள். அந்தோ,இதயத்தைப் பிளக்கவல்ல அவர்களின் சோகக்  கூக்குரலைக் கேளுங்கள். வீரர்களே!

கட்டுண்டவர்களின் தலைகளை வெட்டி எறியவும், எளியவர்களின் துயரச் சுமையைக் குறைக்கவும், பாமரர்களின் இருண்ட உள்ளங்களை ஒளிபெறச் செய்யவும் முன்னேறிச் செல்லுங்கள். ‘அஞ்சாதே அஞ்சாதே ‘ என்று முழங்குகிறது வேதாந்த முரசு. பூமியில் வசிக்கின்ற மனிதர்கள் அனைவருடைய இதய முடிச்சுக்களையும் அது அவிழ்த்து எறியட்டும்!

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள்

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய் ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பாடல்கள் பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவர...